India

“3 நாளில் ரூ.3,924 கோடி அந்நிய மூலதனம் வெளியேற்றம்” : மோடி ஆட்சியில் பின்னடைவில் இந்திய பங்குச் சந்தைகள்!

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மோசமான நிதிநிலை நெருக்கடியில் நாடு சிக்கித் தவிப்பதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை விலக்கிக் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த மாதம் வெளிவந்த அந்நிய முதலீட்டாளர்கள் அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் 7,850 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். அதில், ஈக்விட்டி சந்தைகளிலிருந்து இதுவரை 5,577.90 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியதாகவும், அதே போன்று 1,384.81 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் மட்டும் 4,193.18 கோடி ரூபாய் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அக்டோபர் மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே, அந்நிய மூலதன முதலீட்டாளர்கள் சுமார் 3,924 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நிய முதலீடுகளை விற்று வெளியேறியுள்ளனர்.

முதலீடுகளின் வைப்புத் தொகை குறித்த தரவுகளின் படி, அந்நிய முதலீடுகள் 2,947 கோடி ரூபாய் ஈக்விட்டி சந்தையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், அதே போன்று கடன் துறையிலிருந்து 977 கோடி ரூபாய் வெளியேறியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தின் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மட்டும், மொத்தம் 3,924 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

இந்த மூதலீடுகளை விற்று அந்நிய முதலீட்டாளர்கள் வெறியேறியதால் இந்திய பொருளாதாரத்திற்கு எந்த விதப் பயனும் இல்லை. குறிப்பாக, அந்நிய முதலீட்டாளர்கள் விட்டுச்சென்ற பங்குகள் தேங்கிக் கிடக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.