India
“ரெப்போ வட்டியை குறைத்தும் பயனில்லையா?” : மோடி அரசால் மீண்டும் அடி வாங்கிய இந்திய பங்குச் சந்தைகள்!
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்ற ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின் படி, சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவிகிதத்தில் இருந்து 5.15 சதவிகிதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவுப் பாதைக்கே திரும்பியுள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளின் சரிவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் வரிக்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனால், அடுத்த இரண்டு வர்த்தக நாட்கள் மட்டும் சுமார் 3 ஆயிரம் புள்ளிகள் வரை பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. அதனால், சந்தைகளுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே இனி ஏறுமுகம்தான் என்று பா.ஜ.க-வினர் கூறிவந்தனர்.
இந்நிலையில்தான், இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவை நோக்கித் திரும்பியுள்ளன. கடந்த வாரம் 39 ஆயிரத்து 135 புள்ளிகள் என்ற அளவிற்கு உச்சம் தொட்ட மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், கடந்த சில நாட்களில் சுமார் ஆயிரத்து 450 புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 106 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 45 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 314 புள்ளிகளாக நிலைபெற்றது.
இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் 434 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 673 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 144 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 170 புள்ளிகள் வர்த்தகம் முடிந்துள்ளது. ஒரே நாளில் 139 புள்ளிகள் இறக்கம் கண்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!