India
“டெங்கு காய்ச்சலுக்கு பாரசிட்டமால் சாப்பிட்டால் சரியாகிவிடுமாம்” : பா.ஜ.க முதல்வர் அலட்சிய பதில்!
உத்தரகாண்ட் மாநிலத் தில் சுமார் 4800 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. டேராடூனில் இதுவரை 3ஆயிரம் பேரும், ஹல்த்வானியில் 1,100 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், இவர்களில் டேராடூனில் 4 பேர், ஹல்த்வானியில் 2 பேர் என இறந்தும் போயிருக்கின்றனர். மாநில சுகாதாரத்துறை அறிக்கையிலேயே, செப்டம்பர் 17 வரை, 8 பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் கொசுக்களால் பரவும் தொற்றுநோய் அதிகரித்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், பாராசிட்டமால் மருந்தினை 500 மில்லி கிராம் டோசேஜூக்குப் பதிலாக, 650 மில்லி கிராம் டோசேஜ் அளவில் உட்கொண்டு, சிறிது ஓய்வெடுத்தால் நோய் குணமாகி விடப் போகிறது” என்று திரிவேந்திர சிங் பேசியுள்ளார்.
முதல்வரின் இந்த பதிலைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு மாநிலத்தின் முதல்வர் இதுபோல அலட்சியமாக பேசிவது எப்படி சரியாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்