India
அயோத்தி வழக்கின் வாதத்தை முடிக்க அக்டோபர் 18-ம் தேதி கடைசி கெடு - உச்ச நீதிமன்றம் கறார்!
அயோத்தி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
32வது நாளாக அயோத்தி வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வாதங்களையும் அக்டோபர் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீண்டும் உத்தரவிட்டார்.
ஏனெனில் அடுத்த சில நாட்களில் ஆயுதபூஜை பண்டிகைக்காக ஒரு வாரம் விடுமுறை வருவதையும், இன்னும் 10 நாட்களே வேலை நாட்களாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும் விரைந்து வாதிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்