India
தேர்தல் ஆணையர் அசோக் லாவசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் : மோடி அரசால் பழிவாங்கப்படுகிறாரா ?
மத்திய தேர்தல் ஆணையராக இருப்பவர் அசோக் லாவசா. இவரது மனைவி நோவல் சிங்கால். இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக இருந்து கடந்த 2005-ல் விருப்ப ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில், நோவல் சிங்கால் தாக்கல் செய்துள்ள அந்நிய செலவாணி வருமான வரி கணக்கு தொடர்பான சில முரண்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நேற்று முன்தினம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. லாவசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.கவுக்கு ஆதரவு செயல்பட்டதாக அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர் ஏன் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லாவசா இதனை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.
பிரதமர் மோடியின் வார்தா உரை, லாத்தூர் உரை, பர்மேர் ஆகிய பகுதிகளில் ஆற்றிய உரை மற்றும் ஏப்ரல் 25 அன்று வாரணாசியில் ஆற்றிய உரை ஆகியவை தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மத்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால், அதனை சக அதிகாரிகளான சுனில் அரோரா, சுஷில் சந்திரா ஆகியோர் ஏற்கவில்லை. இதையடுத்து, தேர்தல் முடியும் வரை, ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அசோக் லவாசா தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது தேர்தல் முடிந்து மோடி மீண்டும் பிரதமராகி விட்ட நிலையில், அசோக் லவாசாவின் மனைவிநோவல் சிங்கலுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் விதமாக, வருமான வரித்துறைக்கு நோவல் சிங்கால் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,“ பாரத ஸ்டேட் வங்கியில் முதல் நிலை அதிகாரியாக 28 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். மேலும் சில நிறுவனங்களில் இயக்குனராகவும் உள்ளேன்.
எனது வருமானம் அனைத்துக்கும் முறையான வரி செலுத்தி வருகிறேன். ஓய்வூதியம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும், மேலும் பல்வேறு வகையில் கிடைக்கும் வருவாய் குறித்தும் தகவல்களையும் தெரிவித்துள்ளேன். வருமான வரித்துறை தற்போது நடத்தி வரும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்” என தெரிவித்தார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !