India
வீட்டை காலி செய்ய சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு; மீறினால் இடிக்கப்படும் - ஆந்திர அரசு அதிரடி!
கிருஷ்ணா நதி அருகே உள்ள வீட்டை ஒரு வாரத்திற்குள் காலி செய்யாவிடில், இடித்து அகற்றப்படும் என்று ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குண்டூர் மாவட்டம் உண்டவள்ளியில் கிருஷ்ணா நதி அருகே உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் கடந்த 4 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் சந்திரபாபு வசிக்கும் வீடு உட்பட அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி ஆந்திர அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து அமராவதி தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவின் வீடு உட்பட 30 குடியிருப்புகளையும் உடனடியாக காலிசெய்யுமாறு நோட்டீஸ் பிறப்பித்தனர். ஆனால் யாரும் காலி செய்யவில்லை.
இந்நிலையில் சந்திரபாபு வசிக்கும் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்யவேண்டும் எனவும் தவறினால் கெடு முடிந்தவுடன் வீடு இடிக்கப்படும் எனவும் கூறி அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!