India
“பொருளாதார சரிவை ஒப்புக்கொள்ளமாட்டோம்... ஆனால் தினசரி புதிய அறிவிப்பு” - நிர்மலா சீதாராமனின் தகிடுதத்தம்!
இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் அதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அதனை சரிசெய்வதற்காக அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கோவாவில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு வரி சலுகைகளை அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது, “உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரிகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 22%, புதிய உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். கார்ப்பரேட் வரி அடிப்படையில் நாம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணையாக இருக்கிறோம்.
மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அதிக முதலீடுகளைச் செய்ய விரும்புகிறோம். இதனால் பொருளாதாரம் வலுப்பெறும். நடப்பு நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் மற்றொரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 1க்கு பிறகு தொடங்கப்படும் எந்தவொரு புதிய உள்நாட்டு நிறுவனத்தையும் தொடங்குவதில் புதிய முதலீட்டுக்கு 18 சதவீதத்தில் இருந்து 15 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும்.
ஊக்கத்தொகை அல்லது விலக்குகளைத் தொடர்ந்து பெறும் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க, அவர்களுக்கு நாங்கள் குறைந்தபட்ச மாற்று வரி (MAT) நிவாரணம் அளிக்கிறோம். தற்போதுள்ள வரி 17.01 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Also Read
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?