India
இனி எந்த நேரத்திலும் NEFT, RTGS மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு!
டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சேவைக் கட்டணங்களை தளர்த்தியும், ரத்து செய்தும் வருகிறது ரிசர்வ் வங்கி.
அந்த வகையில், NEFT, RTGS போன்ற முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய கட்டணங்கள் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதுவரை NEFT, RTGS மூலம் பணம் அனுப்பும் முறை காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டும், NEFT-ல் 2.5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், RTGS-ல் 65 ரூபாய் வரையும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் IMPS முறையின் மூலம் 1 லட்சத்துக்கும் கீழ் எப்போது வேண்டுமானாலும் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். UPI, Google Play போன்ற வாலட்கள் மூலமும் பரிவர்த்தனையில் ஈடுபடலாம்.
தற்போது, முழு நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் வகையில் IMPS போன்று NEFT, RTGS முறையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வசதி வருகிற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!