India

“மத்திய அரசு சொல்வதை நாங்கள் செய்கிறோம்” - அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்க ஒப்புதல்!

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் நடப்பு கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு நேற்று அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்புக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று காலை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மாணவர்களின் நலன் கருதியே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் அடுத்த வகுப்பிற்குச் செல்லலாம். பொதுத்தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் அவகாசம். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்கிற நடைமுறைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அறிவித்ததால் தான் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இருமொழிக்கொள்கை மட்டும்தான் தமிழகத்தில் என்றும் நிலைத்து நிற்கும் கொள்கையாக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.