India
” ஜட்டி, பனியன் விற்பனை சரிவு : வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை ” - முதலீட்டாளர்கள் வேதனை
இந்தியாவின் நுகர்வு மந்தநிலையால் உள்ளாடைகள் துறையும் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரவிருக்கும் பண்டிகை மற்றும் குளிர்காலங்களில் விற்பனை இன்னும் அதிக மந்தநிலையை எதிர்கொள்ளும் என உள்ளாடை நிறுவனத்தினர் அஞ்சுகின்றனர். கடந்த 60 வருடங்களாக உள்ளாடை விற்பனையில் கொடிகட்டிப் பறந்த டாலர் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் இதைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வினோத் குமார் குப்தா கூறுகையில், “எனது தொழில் வாழ்க்கையில் உள்ளாடை விற்பனையில் இதுபோன்ற சரிவை நான் இதுவரை கண்டதில்லை” என்றார். இது நுகர்வோர் மத்தியில் உள்ளாடை வாங்குவதை நிறுத்திக்கொள்ளும் எண்ணம் உருவாகியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, “வரவிருக்கும் பண்டிகை மற்றும் குளிர்காலங்களில் இந்த மந்தநிலை சரியாகும் என்ற நம்பிக்கை பெரியதாக இல்லை” என தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய பொருளாதாரம் ஆட்டோமொபைல் துறை சரிவின் தாக்கத்தைத் தாங்கி வருகிறது. இந்நிலையில் சிதைந்துபோன அந்த பொருளாதாரத்தால், உள்ளாடை துறையும் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதனால் இந்த மந்தநிலை இப்போது உள்ளாடை நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது. டாலர் இண்டஸ்ட்ரீஸின் நிதியாண்டு அதிகப்படியான வளர்ச்சி 2020ல் 12-15 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என அவர் தெரிவித்தார்.
மந்தநிலை தாக்கத்தை குறைக்க உள்ளாடை நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்ற கேள்விக்கு ரூபா அண்ட் கோ நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் அகர்வால் கூறுகையில், “மந்தநிலை தாக்கத்தை அதிக விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் ஈடுசெய்ய முயற்சி செய்து வருகிறோம்.
மேலும் மொத்த விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சமாளிக்க சில்லறை விற்பனைகளில் கவனம் செலுத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த தேக்க நிலையால் சில்லறை விற்பனையாளர்கள் / விநியோகஸ்தர்கள் பணம் செலுத்துவதில் தாமதமாவதால், உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. அதனால் மூலதன சுழற்சி பாதிக்கப்படுகிறது” என்று அகர்வால் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் ஜூன் காலாண்டில் உள்ளாடை விற்பனை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் 4 முன்னணி உள்ளாடை நிறுவனங்கள் கடந்த 10 வருடங்களில் இல்லாத வகையில் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளன.
1970ல் வெளியிடப்பட்ட Men's underwear index என்ற ஆய்வின் முடிவில், ஒரு நாட்டில் உள்ளாடை விற்பனை குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் ஏழ்மையான நிலையில் இருப்பதைக் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டது. இதனால்தான் இந்தியாவின் தற்போதைய நிலை, பொருளாதார அறிஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!