India
“கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும்” - மத்திய இணையமைச்சர் அஸ்வினிகுமார் செளபே பேச்சு!
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக் கருவிகள் செயல்பாட்டை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற "புற்றுநோய்க்கு எதிரான போர்" விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் துவங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ சீட்டுகள் கிடைக்கும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா போன்றவற்றை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?