India
UPI பேமெண்ட் மூலம் மோசடி: 3 பீர் ஆர்டர் செய்து ரூ.87 ஆயிரத்தை பறிகொடுத்த வங்கி ஊழியர்!
இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொழிற்நுட்பம் எளிதாகி இருக்கும் அதே நேரம், ஆன்லைன் மற்றும் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளில் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் மும்பையில் பெண் ஒருவர் ஆன்லைன் ஆர்டரின் போது 87 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
மும்பை பொவாய் பகுதியைச் சேர்ந்த ராதிகா பரேக். இவர் பொவாய் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் பணி முடித்துவிட்டு ஆன்லைன் மூலம் பீர் வாங்க முடிவு செய்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது வீட்டுக்கு டெலிவரி செய்யும் பார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார். அதில் குறிப்பிட்ட கடைக்கு, மொபைல் எண் மூலம் தொடர்பு கொண்டு 3 பீர்களை ஆர்டர் செய்யவேண்டும் என கேட்டுள்ளார். மறு முனையில் பேசியவர், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே, டெலிவரி செய்யப்படும் எனக் கூறியிருக்கிறார்.
தொகையை கூகுல் பே செயலில் இருந்தே செலுத்தலாம் என்ற கூறிய அவர், பெண்ணின் யூபிஐ (UPI) எண்ணைக் கேட்டுப் பெற்றுள்ளார். அதனை நம்பி ராதிகாவும் யூபிஐ எண்ணைக் கொடுத்துள்ளார். பின்னர் போனை துண்டித்த கடைக்காரர் அவரது யூபிஐ எண்ணிற்கு பில் தொகையை கேட்டு ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார்.
அந்த ரிக்வெஸ்டை ராதிகா ஏற்றதும், வங்கி கணக்கில் இருந்து 29 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா கடைக்காரரிடம் மீண்டும் மொபைலில் தொடர்பு கொண்டிருக்கிறார். தவறுதலாக மாற்றி பணத்தை எடுத்துவிட்டோம், ஒரு பீருக்கான தொகை 420 ரூபாய் போக மீதி தொகையை வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்துவிடுவதாகக் கூறி மன்னிப்பும் கேட்டுள்ளார் அந்த நபர்.
இந்த அழைப்பை பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களில், மேலும் 58 ஆயிரம் ரூபாய் ராதிகா வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றத்தின் உச்சத்திற்கே ராதிகா சென்றுள்ளார். உடனே அடுத்த நிமிடமே கடைக்காரர் எண்ணிற்கு தொர்ப்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக வந்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராதிகா, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக சென்னையில் மாணவி ஒருவர் பிரியாணி ஆர்டரின் போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.40 ஆயிரத்தை இழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பான பரிவர்த்தனைகள் என, விளம்பரப்படுத்தப்படும் யுபிஐ பேமெண்ட் முறையிலும் மோசடிகள் அதிகரித்திருப்பது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் மீது அச்சத்தை உருவாக்கும் விதமாக உள்ளது. இப்படி பயனாளர்கள் வங்கி கணக்குகள் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடி அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!