India

பொருளாதார மந்தநிலையால் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்திக்கும்: ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை!

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில், நடப்பு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்திக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்தியா மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2019-20ம் நிதியாண்டு காலத்தில் 6.7 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் மக்களின் நுகர்வு திறன் குறைந்தது ஆகியவை பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரிவு நிலை, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.