India
“பாஜக ஆட்சியில் இந்தியாவில் தொழில் நடத்த முடியாது” : அமெரிக்காவிற்கு முதலீடு செய்ய தப்பி ஓடும் மஹிந்திரா!
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மோசமான நிதிநிலை நெருக்கடியில் நாடு சிக்கித் தவிப்பதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் ஒருநாள் உற்பத்தியையே நிறுத்தி, பொருளாதார மந்த நிலை உள்ளது என மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் பயன்பாட்டு வாகன உற்பத்திக்கு பெயர் போன மஹிந்திரா நிறுவனம் 1,500 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் பல மில்லியன் டாலர்களை அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, மஹிந்திரா நிறுவனத்தின் துணை அமைப்பான மஹிந்திரா ஆட்டோமேடிவ் நார்த் அமெரிக்கா (MANA) இந்த மாதம் அமெரிக்காவின் மிச்சிகனில், ஒரு புதிய ஆட்டோமொபைல் பிளாண்ட்டை அமைக்க ரேசர் (RACER) டிரஸ்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தொழில்துறை மதிப்பீட்டின்படி, மஹிந்திரா நிறுவனம் இந்த புதிய பிளாண்ட்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது.
தற்போது உள்ள நடவடிக்கையை மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறியதின் விளைவு இந்தியாவில் இருக்கும் பெரும் நிறுவங்கள் வெளிநாடுகளுக்கு முதலீடு செய்யும் நிலைமைக்குச் சென்றுள்ளனர். இதனால் இந்திய பொருளாதாரம் மேலும் பாதிப்புகளை சந்திக்கும் என்பது தெளிவாகிவிட்டது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!