India
காஷ்மீர் பிரச்னைக்காக டெல்லியில் மாபெரும் போராட்டம்... அண்டை நாடுகளின் கவனத்தைப் பெறும் தி.மு.க!
காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டித்தும், காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட வலியுறுத்தியும் அனைத்துக் கட்சி எம்.பி.களின் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்தியாவின் சிறப்பு அங்கமாக இருந்துவந்த ஜம்மு காஷ்மீரை இன்றைக்கு அடக்கு முறைகளால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக வெளியே தலைகாட்ட முடியாத வகையில் வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுள்ளனர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, பெரும்பான்மையைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கிவரும் பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் தி.மு.க முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி, நாளை காலை 11 மணியளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன. நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியான தி.மு.க முன்னெடுத்திருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் அண்டை நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக கடுமையான எதிர்வினையாற்றினர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள். தொடர்ந்தும், அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனநாயக விரோத பா.ஜ.க அரசின் காஷ்மீர் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க முன்னெடுக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கவனம் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகம், தி.மு.க முன்னெடுக்கும் போராட்டம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் மறுசீரமைப்புக்கு எதிராக, பெரும்பான்மை பெற்ற அரசுக்கு எதிராக, மக்களவைத் தேர்தல் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தி.மு.க நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், காஷ்மீர் பிரச்னையில் உலக நாடுகளின் கவனத்தைப் பெற முடியும் எனக் கருதப்படுகிறது.
பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், 39 எம்.பி.,களை வைத்து என்ன செய்யப்போகிறது தி.மு.க எனக் கேட்டவர்களுக்கு, செயல்களின் மூலம் பதிலளித்து வருகிறது தி.மு.க. மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி, தி.மு.க எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!