India
மகாபாரத ஒப்பீடு : தான் பேசுவது என்ன என்று புரிந்துதான் பேசுகிறாரா ? - ரஜினியை சீண்டும் ஓவைசியின் கேள்வி !
காஷ்மீர் விவகாரத்தில் அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
மேலும், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணரும், அர்ஜூனன் போன்றவர்கள் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடந்த வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசியிருந்தார்.
இதனையடுத்து ரஜினியின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நெட்டிசன்களும் மீம்ஸ் தயாரித்து விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, புராண கதாபாத்திரங்களுடன் எப்படி அரசியல் தலைவர்களை ஒப்பிட முடியும் எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், ஐதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, ரஜினியின் பேச்சு குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதாவது, மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணனும், அர்ஜூனனாகவே இருக்கட்டும். ஆனால், இங்கு பாண்டவர்களும், கெளவர்களும் யார்? நாட்டில் மீண்டும் ஒரு மகாபாரத போர் நடைபெற வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? அவ்வாறு பாரத போர் நடந்தால் தோல்வியுற போகும் கெளரவர்கள் யார்? என சரமாரியாக ரஜினியின் பேச்சுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஓவைசி.
ஓவைசியின் இந்த கேள்விகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், காஷ்மீர் பிரச்னையுடன் இணைத்து, மகாபாரத கதையில் மண்ணுக்காக போர் மூண்டது போல், காஷ்மீருக்காக மோடியும், அமித்ஷாவும் போர் புரிய போகிறார்களா? அப்படி என்றால் கர்ணனாக இருக்கப்போவது யார் என பலர் பதிலுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!