India
பக்ரீத்துக்காக தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல் : துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகள்!
காஷ்மீரில் பக்ரீத் பண்டிகைக்காக தளர்த்திக் கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து - சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ பிரிவு ரத்து காரணமாக காஷ்மீரில் 144 தடை விதிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதற்காக, முக்கியத் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டனர். மக்கள் கிளர்ந்தெழுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டிருந்தன.
ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி, இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றியபோதும் கூட காஷ்மீர் மக்களுக்கு அது சென்றடையாத நிலை இருந்தது.
இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டது. மொபைல், இண்டர்நெட் சேவை பல இடங்களில் சீரானது. ஆனால், பதற்றமான சில பகுதிகளில் பக்ரீத் தொழுகைக்காக மக்கள் மசூதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை பக்ரீத் சிறப்பு தொழுகைகள் முடிந்ததும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மொபைல், இண்டர்நெட் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மக்கள் யாரையும் எளிதில் தொடர்புகொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!