India
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமனம்!
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோகனை கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையோட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ராஜினாமாவை வாபஸ் பெறச் சொல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (ஆகஸ்ட் 10) கூடுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கிறது.
ராஜினாமா முடிவை ராகுல்காந்தி மாற்றிக்கொள்ளாததால் காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒரு கட்டத்துக்கு பின்னர் ராகுலும், சோனியாவும் வெளியேறிச் சென்றனர். கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய சோனியாகாந்தி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் தானும், ராகுல்காந்தியும் பங்கேற்கவில்லை என கூறினார்.
இந்நிலையில், கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று, செயற்குழுவில் பங்கேற்ற கட்சியின் அனைத்து மாநிலத் தலைவர்களும், மூத்த தலைவர்களும் வலியுறுத்தினர். இதை ராகுலிடம் மீண்டும் வலியுறுத்துவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ராகுலிடம் எடுத்துக் கூறி, தலைவர் பதவியில் நீடிக்குமாறு தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், ராகுல் தனது ராஜினாமா முடிவில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். இந்நிலையில், இடைக்கால தலைவராக சோனியாகாந்தி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்