India
சுதந்திர தினத்தன்று லடாக்கில் கொடி ஏற்றும் தோனி ? : அரசியல் விளையாட்டில் சகுனி வேலை பார்க்கிறதா பா.ஜ.க
வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில், ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தேசியக் கொடியை ஏற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்து தனது ஓய்வை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இரண்டு மாதம் லெப்டினெண்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார் தோனி.
வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் படையினருடன் இணைந்து ரோந்து பணியில் தோனி ஈடுபட உள்ளார்.
இதற்கிடையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் அறிவித்து மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று புதிதாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள லடாக்கின் லே பகுதியில் லெப்டினெண்ட் கர்னலாக உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தேசியக்கொடியை ஏற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், லே பகுதியில் தோனி எங்கு தேசியக்கொடியை ஏற்றவுள்ளார் என்ற தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜார்கண்ட் மாநில சட்டபேரவைத் தேர்தலில் தோனியை களம் இறக்க பா.ஜ.க திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தோனியை லடாக்கில் கொடி ஏற்ற வைத்து கதாநாயக பிம்பத்தை உருவாக்கும் திட்டமாக இது இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!