India
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சென்னை சேலம் இடையே 276 கி.மீ., தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்ற பிறகே நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்படும் என்றார். நிலத்தை கையகப்படுத்திய பின்னரே அந்த அனுமதிகளைப் பெறமுடியும் என்பதால் தடையை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு விவசாயிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததோடு வழக்கின் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறினர். இதையடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும், விவசாயிகளுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு