India
சிறப்பு அந்தஸ்து ரத்து: ஜம்மு காஷ்மீரில் இனி நடக்க இருக்கும் அரசியல் மாற்றங்கள் என்னென்ன?
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தில் ஆட்சி புரிந்து வந்த மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க 1949 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டார்.
இதன் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியதால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்பட்டு வருகிறது.
1954-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் சட்டப்பிரிவு 370 இயற்றப்பட்டது.
இதன் மூலம் வெளியுறவுத்துறை, ராணுவம், தகவல் தொடர்பு தவிர, மற்ற நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எந்த சட்டமானாலும் காஷ்மீர் சட்டப்பேரவை ஒப்புதல் பெற்றாலே மாநிலத்தில் அமல்படுத்த முடியும்.
தனி கொடி, இறையாண்மை, தன்னாட்சி கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பிரிவு 370ன் கீழ் 35ஏ என்ற பிரிவும் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் அசையா சொத்துக்களை வாங்க முடியாது என வழிவகை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது.
இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு இன்று முதலே அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், சட்டப்பிரிவு நீக்கப்பட்டதின் மூலம் காஷ்மீரும் இந்தியாவின் பிற மாநிலங்களை போன்று செயல்படும். மற்ற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க முடியும்.
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக் பகுதியை சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் (அந்தமான், லட்சத்தீவுகள் போன்று), ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் (டெல்லி, புதுச்சேரி) மாற்றப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மற்றும் சட்டதிருத்தங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்.
1954ம் ஆண்டு ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவை பதவிக்காலம் 6 ஆண்டாக இருந்து வந்தது. தற்போது அந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் மற்ற மாநில சட்டப்பேரவையின் காலம் போன்று ஜம்மு காஷ்மீருக்கும் 5 ஆண்டுகள் பதவிக்காலமாக நிர்ணயிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் காவல்துறை, நில உரிமை போன்ற பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வரும். தன்னாட்சி அதிகாரமற்ற அரசாக ஜம்மு காஷ்மீர் செயல்படும்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !