India

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் அடியாழத்திற்கு சரிந்த பங்குச்சந்தைகள் : அதிர்ச்சி தகவல்!

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது குறைய தொடங்கிய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவிலேயே இருக்கிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எழுந்த நாளில் இருந்து பங்குச் சந்தைகள் குறைந்தைக் காட்டிலும் மேலும் மந்தமாக காணப்பட்டது.

மந்த நிலையில் இருந்த பங்குச் சந்தைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து வாரத்தின் முதல் நாளான இன்று சுமார் 650 புள்ளிகள் வீழ்ந்து வீழ்ச்சியிலே பங்கு வர்த்தகம் தொடங்கியது.

அதாவது இன்று மதியம் 3 மணி அளவில் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 446.73 புள்ளிகள் வீழ்ந்து 36,671.49 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142.05 புள்ளிகள் வீழ்ந்து 10,855.30 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. இதனால் முதளிட்டாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து உள்ளனர்.

அதுமட்டுமின்றி அமெரிக்கா- சீனா இடையிலான நடைபெறும் வர்த்தகப் போரினால் ஆசிய சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. இதனால் சீனாவின் கரன்ஸி மதிப்பும் சரிவடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 77 பைசாக்கள் வீழ்ந்து 70.37 ரூபாய் ஆக உள்ளது. பா.ஜ.க ஆட்சியில் பங்குச் சந்தைகள் உயர்ந்தைக் காட்டிலும் அதிக முறை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.