India
அயோத்தி வழக்கு: “எங்களால் சமரசத் தீர்வு காண முடியவில்லை” கைவிரித்தது மத்தியஸ்தர் குழு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி நில உரிமை குறித்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த மார்ச் 8ம் தேதி அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண மத்தியஸ்தர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞரும், சமரசவாதியுமான ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. அயோத்தி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினர் மத்தியிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது அந்த குழு.
இதனிடையே மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்தியஸ்தர் குழு மேற்கொண்ட சமரச முயற்சியில் தீர்வு காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அயோத்தி வழக்கை ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்துள்ளார். வரும் 6-ந் தேதி முதல் வழக்கு தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கோகாய் தெரிவித்துள்ளார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!