India
என்.ஆர்.ஐ பெயரில் இட ஒதுக்கீடு: லட்சக்கணக்கில் திருடும் மருத்துவக் கல்லூரிகள்- உண்மையும் ! பின்னணியும் !
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகராக மருத்துவ படிப்புகளை வியாபார நோக்கத்தோடு அரசு மருத்துவக் கல்லூரிகளும் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டை பயன்படுத்தி லட்சக் கணக்கில் மருத்துவ சீட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குஜராத், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் என்.ஆர்.ஐ கோட்டா உள்ளடக்கியுள்ளது. குஜராத்தில் 241, ராஜஸ்தானில் 212, பஞ்சாபில் 41, புதுச்சேரியில் 22 ஹரியானாவில் 15, ஹிமாச்சலில் 22 என என்.ஆர். ஐ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாவதவர்கள் இது போன்ற என்.ஆர்.ஐ ஒதுக்கீடுகள் மூலமும், நிர்வாக ஒதுக்கீடு மூலமும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். என்.ஆர்.ஐ இடங்களை வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் மட்டுமில்லாமல் உள்நாட்டில் உள்ளவர்களே இதனை பெரும்பாலும் பயன்படுத்திகின்றனர்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு என்.ஆர்.ஐ. ஆக இருக்க வேண்டும் என்பதில்லை. என்.ஆர்.ஐ ஆக உள்ளவர்கள் மூலம் மருத்துவ படிப்பில் சேரலாம் என்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மாணவர்களின் மருத்துவக் கனவுகள் சிதைந்து போகின்றன.
இது போன்ற என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேருபவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதற்கு நிகராக அரசு கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், 14 முதல் 20 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ இடங்கள் அரசு கல்லூரிகளில் விற்கப்படுகிறது. பொதுவாக, அரசு கல்லூரிகளில் மருத்துவ சீட்டுகளின் கட்டணம் ஒரு ஆண்டுக்கு 25 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டால் ஏழை மற்றும் நடுத்தர வசதிகொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவு சிதையும் என்பதால் ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பால் அம்மாநிலத்தில் என்.ஆர்.ஐ கோட்டா கைவிடப்பட்டது. அதேப்போல், மத்திய பிரதேசத்தில் கடந்த 2016ம் ஆண்டு 28 என்.ஆர்.ஐ சீட்ட்களுக்கான ஒதுக்கீடு கைவிடப்பட்டது. கர்நாடகாவில் இந்த ஒதுக்கீட்ட தொடங்க திட்டமிட்டிருந்தாலும் மாணவர் இயக்கங்களின் எதிர்ப்பால் அரசின் முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!