India
நீட் விலக்கு இல்லை : 2 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன மத்திய அரசு - பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய எடப்பாடி
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாக்கள், நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே தமிழகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2017-18ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு முன், நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு, சென்ற வாரம் நடத்திய விசாரணையில் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக கடந்த 2017ம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டது.
2017ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதியன்று உள்துறை அமைச்சகத்துக்கு கிடைக்கப்பெற்ற தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்படி, அன்றைய தினமே சட்டம், நீதி, சுகாதாரம், மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட துறைகளில் இருந்து கருத்துகள் பெறப்பட்ட பிறகு, செப்.,11ம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
பின்னர் 2017ம் ஆண்டு செப்.,22ம் தேதி நீட் விலக்கு தொடர்பான இரண்டு மசோதாக்களும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பட்டது என மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்டுள்ளதை இதுகாறும் தமிழக அரசு மறைத்து வைத்திருப்பது இன்றைக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுநாள் வரை, நீட் விலக்கு குறித்த மசோதா குடியரசுத் தலைவர் வசம் உள்ளது என சட்டசபையிலும், மக்கள் முன்னிலையும் சொல்லி ஏமாற்றி வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபைக் கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகமும் நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய அரசு இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதேநேரம் அ.தி.மு.க.,வின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், இரு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டது என்பதை மக்களிடம் மறைத்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!