India
இந்த ஆப் எல்லாம் உங்கள் போனுக்கு ஆபத்து : நீங்கள் உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய 16 செயலிகள்-Google Alert
ஏஜெண்ட் ஸ்மித் எனும் மால்வேர் வைரஸ் சர்வதேச அளவில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்போன்களைத் தாக்கியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர்க்கு மாற்றாக உள்ள சில செயலிகள் மூலம் இந்த வைரஸ் பரவி உள்ளதாக தொழில்நுட்ப ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனாளர்களை குறிவைத்து இந்த தொழில்நுட்பத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட உலக அளவில் இரண்டரை கோடி பயனாளர்களின் போன்கள் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
ஏஜெண்ட் ஸ்மித் எனும் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படும் 16 செயலிகளை கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து கண்டறிந்து நீக்கியுள்ளது. இந்த செயலிகள் இனி ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய இயலாது.
மேலும் ப்ளே ஸ்டோர் வழியாக இந்த செயலிகளுக்கு அப்டேட் இருக்காது. இருப்பினும், இந்த செயலிகளை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே அகற்ற முடியும். எனவே, உங்கள் தொலைபேசியில் பின்வரும் செயலிகளை நீங்கள் இன்ஸ்டால் செய்து இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிடுங்கள்.
வைரஸ் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட 16 செயலிகள் :
லுடோ மாஸ்டர் (ludo master)
ஸ்கை வாரியர்ஸ் (sky warriors)
கலர் போன் ஃப்ளாஷ் (color phone flash)
பயோ ப்ளாஸ்ட் (bio blast)
ஷூட்டிங் ஜெட் (shooting jet)
போட்டோ ப்ரொஜெக்டர் (photo projector)
கன் ஹீரோ (gun hero)
குக்கிங் விட்ச் (cooking witch)
பிளாக்மேன் கோ (blockman go)
கிரேஸி ஜூசர் (crazy juicer)
கிளாஷ் ஆப் வைரஸ் (clash of virus)
ஆங்கிரி வைரஸ் (angry virus)
ராபிட் டெம்பிள் (rabbit temple)
ஸ்டார் ரேன்ஜ் (star range)
கிஸ் கேம் (kiss game)
கேர்ள் க்ளாத் எக்ஸ்ரே ஸ்கேன் சிமுலேட்டர் (girl cloth xray scan simulator)
மேலும், உங்கள் தொலைபேசியில் ஆபாச விளம்பரங்கள் அதிகமாக வருவதைக் கண்டறிந்தால், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஆண்டி வைரஸ் செயலியை நிறுவி, உங்கள் தொலைபேசியை ஸ்கேன் செய்ய வேண்டும்.
செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது எப்போதும் கூகுள் ப்ளே ஸ்டோரை பயன்படுத்தவும். அதற்கு மாற்றாக இருக்கும் சில ஆப்களை பயன்படுத்துவதாலே இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!