India
டிக்டாக் மீதான தடையை எதிர்த்து வழக்கு : உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!
டிக்டாக் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களால் சமூகத்தில் ஒழுக்கமின்மையும், கலாசார சீர்கேடும் ஏற்படுகிறது. அதனால் அந்தச் செயலிக்கு தடை விதிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை டிக்டாக் செயலிக்கு தடை விதித்தும், அதன் வீடியோக்களை ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதிக்கவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, மத்திய அரசும், கூகுள் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
அதில், தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான விசாரணை அமர்வை மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிக்டாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கு மீது இன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக பல்வேறு விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றமே இதனை தொடர்ந்து விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !