India
''ஒரே நாடு ஒரே தேர்தல்'' குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க தி.மு.க நோட்டீஸ் !
''ஒரே நாடு ஒரே தேர்தல்'' திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது. இத்திட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இன்று இது விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 50% ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் எண்ணி வாக்குப்பதிவு இயந்திரங்களோடு ஒப்பீடு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. விவாதத்தின் போது, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் பாதிப்பு குறித்தும், அதனை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேச உள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?