India
கவுரி லங்கேஷ் இவ்வாறு தான் கொலை செய்யப்பட்டார் - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் !
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூருவில் தனது வீட்டுக்கு வெளியே வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் சரத் கலாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என சரத் கலாஸ்கர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக காவல்துறையிடம் சரத் கலாஸ்கர் அளித்துள்ள வாக்குமூத்தில், '' தபோல்கரை தான்தான் சுட்டுக் கொன்றதாகவும், கவுரி லங்கேஷ் கொலையில் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 2016 ஆகஸ்ட்டில், பெல்காமில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அதில் கவுரி லங்கேஷ் பெயரும் இடம்பெற்றிருந்தது. எனவே, கவுரி லங்கேஷ் கொல்லப்பட வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாரத் குர்னே என்பவர் வீட்டில் கொலை பற்றி விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு பாரத் குர்னே வீட்டின் அருகில் உள்ள மலைக்குச் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டோம். இந்த கொலைக்கு Event(சம்பவம் அல்லது நிகழ்வு) என்று குறியீட்டு பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அமோல் காலே அனைவரையும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பச் சொன்னார், Event நாளில் மட்டுமே திரும்பி வர வேண்டும் என்று கூறினார். கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றது 26 வயதேயான, பரசுராம் வாங்மேர் தான். கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு, ஆதாரத்தை அழிக்கும் வகையில், அந்த துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மும்பை-நாசிக் நெடுஞ்சாலைக்கு அருகே ஒரு சிற்றோடையின் 3 பகுதிகளில் வீசி எறிந்தேன் '' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!