India
பல்கலைக்கழகங்களில் இந்தி திணிப்பு: யு.ஜி.சி சுற்றறிக்கைக்கு சிபிஎம் தலைமைக்குழு எதிர்ப்பு!
மத்திய பா.ஜ.க அரசு வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் பா.ஜ.க இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது என நாடு முழுவதும் இந்தி பேசாத மாநிலங்கள் கடும் கண்டங்களை எழுப்பியது. இதையடுத்து மாணவர் அமைப்பினர், எதிர்க்கட்சிகள் என பலர் போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து தற்பொழுது அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும் இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் முயற்சி எடுப்பதாக தகவல் வெளியானது. யு.ஜி.சி எனப்படும் உயர்கல்வி குறித்து நிர்வாகிக்கும் பல்கலைக்கழக மானியக்குழு, நாடு முழுவதில் யு.ஜி.சி கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், கடந்த ஆண்டு 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் எழுதியுள்ள கடிதத்தில் மேற்கோள் காட்டி, இந்தி கற்பித்தல் தொடர்பான ஆலோசனைகள், மற்றும் விருப்பங்கள் குறித்து பல்கலைக்கழகங்களின் முடிவுகள் வரவேற்கப்படுகிறது. மேலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்னவென்றால், பல்கலைக்கழகங்கள் யாவும் சுயாட்சி பெற்ற நிறுவனங்களாக விளங்குவதால், தங்கள் அதிகாரவரம்புக்குள் எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்து, எந்த விதத்தில் அதை கற்றுக்கொடுப்பது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்துத்துவா கருத்துக்களை விதைக்கு பல பல்கலைக்கழகங்கள் இதனை ஏற்றுக்கொண்டல் மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. யு.ஜி.சி இந்த அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,"புதிய கல்விக் கொள்கையின் வரைவில் இந்தியைத் திணித்திட மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு அதனை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்ற பின்னணியில் இதுபோன்று ஒரு சுற்றறிக்கையை பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஏற்பட்டிருந்த சர்ச்சையைச் சரிசெய்திட மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டிருந்தது. எனவே, பல்கலைக் கழக மானியக் குழு இந்தியைத் திணித்து சுதந்திரமான முறையில் சுற்றறிக்கை வெளியிட முடியாது. இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களுடன் உள்ள மாபெரும் நாடாகும்.
இந்த நிலையில் யு.ஜி.சி போன்ற ஓர் அமைப்பு, முறையான நடைமுறைக் கலந்தாலோசனைகள் எதுவுமின்றி, ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் நாடு முழுவதும் திணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருப்பது, இதர மொழிகளைப் பேசும் மக்களிடையே தேவையற்ற முறையில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். இத்தகைய இழிமுயற்சிகள், காரணமாக பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட மக்களிடையே ஏற்பட்டிருக்கிற ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கே இது இட்டுச் செல்லும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!