India
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை: இந்துத்துவாக்களை தோலுரிக்கும் அமெரிக்க ஆய்வு
இந்தியாவில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மோடியின் முதல் ஆட்சியில் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்ற ஆணைக்கு பிறகு இந்த தாக்குதல் என்பது அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு சமூக அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. மோடி ஆட்சியில் இந்த அவலம் இப்போது உலக அளவில் தெரிந்துள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் "சர்வதேச மதச் சுதந்திரம்" குறித்த 2018-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ”இந்தியாவில் 2018ம் ஆண்டு மக்கள் தொகையின் எண்ணிக்கை படி 130 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். இதற்கு முன் 2011ம் ஆண்டு இருந்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்களாகவும், 14.2 சதவீத மக்கள் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்கள் 2.3 சதவீதமும், சீக்கியர்கள் 1.7 சவீதமும் வாழ்கின்றார். மற்ற மதத்தை சார்ந்தவர்கள் 1 சதவீதம் பேரும் வாழ்கின்றார்”. என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த அறிக்கையில், உலக நாடுகள் தங்கள் மக்களின் மனித உரிமைகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்கிறார்கள் என்பதை கூறப்பட்டுள்ளது. "இந்தியாவில் 2018ம் ஆண்டு, இந்துத்துவா கும்பல்களால், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. ” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
” மாட்டுக்கறி வைத்திருப்பதாக முஸ்லிம் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது. மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்திகளை உருவாக்கி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கொடூரமும் நடைபெற்றுள்ளது. தேசத்தில் பல ,பகுதிகளில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வன்முறையை தடுக்க இந்திய அரசு தவறியுள்ளது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மீதான் இந்த தாக்குதல்களுக்கு ஆட்சியாளர்களும் துணைபோவதாகவும் அமெரிக்க ஆய்வு குற்றம் சாட்டியுள்ளது. “ பா.ஜ.க அரசின் மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் என பலரும் சிறுபான்மையினருக்கு எதிராக கொதிப்பை ஏற்படுத்தும் வகையில் மோசமான கருத்துக்களை சர்வ சாதாரணமாக பேசுகின்றனர். அதுமட்டுமின்றி, அரசு சாரா தொண்டு நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகளின் மீது தாக்குதல் நடத்துபவர்களை கண்டுபிடித்து கைது நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்றாலும், அரசியல் தலையீடு மூலம் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். இந்த நடவடிக்கையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி உயர் அதிகாரிகளும் தலையீட்டுள்ளனர்.” என்று பா.ஜ.க அரசின் முகத்திரையை கிழிக்கிறது அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை.
மேலும், இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 18 முறை வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திரபிரத்தில் இப்படியான ஒரு வன்முறையின் போது தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய முஸ்லீம் முதியவரை காப்பற்ற நடவடிக்கை எதுவும் எடுக்காமல் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லாமல் போலீஸ் தாமதப்படுத்தியதால் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு எடுத்த பல நடவடிக்கைகளால் முஸ்லிம் மக்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முஸ்லீம் கல்வி நிறுவனங்களுக்கு சிறுமான்மைக்கு அந்தஸ்து வழங்குவதை ஆளும் அரசு வலுவாக எதிர்ப்பது, இஸ்லாமிய பெயர்களை கொண்டுள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவது, என இஸ்லாமிய சமூக மக்களின் இந்திய வரலாற்றையும், அவர்களின் அடையாளத்தையும் பங்களிப்பையும் அழிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என தெரிவிக்கிறது ஆய்வறிக்கை.
மதரீதியான கொலைகள், மதத்திற்காக தாக்குதல், பாகுபாடு காட்டுதல், சிறுபான்மையினர் உடைமைகளை சூறையாடுதல் மற்றும் தனி நபர் விரும்பும் மதத்தை, நம்பிக்கையை பின்பற்றலாம் என்ற உரிமையை நசுக்கும் வேலைக இந்தியாவில் நடந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் மதம் தொடர்பான சுதந்திரத்தை மதிக்கவும், சகிப்புத்தன்மையை மக்களிடையே உருவாக்கவும் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சிகள், மனித உரிமை குழுக்கள், சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.
இந்த ஆய்வின் மூலம் ஒரே நாடு ஒரே மதம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வரும் பா.ஜ.க அரசின் முகத்திரை சர்வதேச அரங்கில் கிழிந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!