India
“தண்ணீர் இல்லாமல் தினமும் போராட முடியாது” : தற்கொலைக்கு அனுமதிக்க மோடிக்கு விவசாயி கடிதம்!
தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விவசாயம் முற்றிலும் அழிந்து போகக்கூடிய இக்கட்டான சூழலில் உள்ளது. அரசாங்கத்தின் எந்த திட்டமும் மக்களின் பிரச்னைகளை சரி செய்யவில்லை அதுமட்டுமின்றி தண்ணீர் விநியோகிக்க எந்த ஒரு புது திட்டமும் கொண்டுவரவில்லை. இதனால் மக்கள் தங்கள் தேவைக்காக குடிநீர் தேடி பல கிலோமீட்டர் பயணம் செய்தும் போதிய அளவில் தண்ணீர் கிடைப்பதில்லை. வறட்சியால் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், ஹாசாயான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங் என்பவர் பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, “எங்கள் பகுதியில் குடிநீர் உப்புத் தன்மையுடன் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அரசு அதிகாரிகளை அணுகினோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் இல்லாத நிலைமையில் குடிநீருக்கும் அல்லாட வேண்டியிருப்பதால், ஒரு குடம் நீருக்காக நாங்கள் பல கிலோமீட்டர் தொலைவு நடக்கிறோம். தண்ணீர் இல்லாமல் தினமும் போராட முடியாது என மனம் நொந்து விரக்தி நிலையில் கடிதம் எழுதியுள்ளார் சந்திரபால் சிங். தனது மூன்று மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார் அவர். குடிநீர் பிரச்னை தொடர்பாக விவசாயி சந்திரபால் சிங் மோடிக்கு கடிதம் எழுதி, தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிப்தட் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சாதே என்ற விவசாயி, ஆயிரத்து 64 ரூபாயை பிரதமர் நரேந்திர மோடிக்கு மணியார்டர் அனுப்பியது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை சஞ்சய் சாதே விற்பனைக்கு கொண்டு சென்றபோது, ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் விலைக்கு கேட்கப்பட்டுள்ளது. இறுதியாக ரூ.1 ரூபாய் 40 காசுகள் என்ற விலைக்கு வெங்காயத்தை விற்று, வெறும் 1,064 ரூபாயோடு வீடு திரும்பினார். பின்னர் அந்தப் பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்து, தனது குமுறலை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!