India
சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!
இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் சாஹித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.
23 இந்திய மொழிகளைச் சேர்ந்த இளம் (35 வயதிற்குற்பட்ட) இலக்கியப் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. சிறார் இலக்கியப் படைப்பாளிகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மொழிக்கும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விருது பெறுவோர்க்கு செப்புப் பட்டயமும் ரூ. 50,000 பணமுடிப்பும் அதற்குரிய விழாவில் வழங்கப்படும்.
தமிழ் மொழிப் படைப்புகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான ‘யுவ புரஸ்கார் விருது’ 'வால்' கவிதைத் தொகுப்பாக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது தேவி நாச்சியப்பனுக்கு (தெய்வானை) அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு இந்திய அளவில் யுவ புரஸ்கார் விருதுகளை கவிஞர்களே அதிகளவில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?