India

மூத்த திரைக்கலைஞரும், எழுத்தாளருமான கிரீஷ் கர்னாட் (81) காலமானார்!

பெங்களூருவில் வசித்து வந்த கிரீஷ் கர்னாட் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார்.

இவர் 1938 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் கிரிஷ் கர்னாட். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார்.

கல்லூரியின் போதே அவர் ‘யாயதி' என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்' (1964) மற்றும் ‘ஹயவாதனா' (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.

கிரிஷ் கர்னாடுக்கு, 1974 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கிரிஷ் கர்னாட் கவுரிவிக்கப்பட்டார்.

பின்னர் ஞானபீட விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சங்கீத நாடக அகாடமி, 10 தேசிய விருது, 7 ஃபிலிம் ஃபேர் விருது என திரைத்துறையில் தனது நடிப்புக்கும் இயக்கத்துக்கும் பல விருதுகளைக் குவித்துள்ளார்.

உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா' என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

தமிழில் காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார்.

பத்திரிக்கையாளர்கள்பத்திரிக்கையாளர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக முதலில் கண்டன குரல் எழுப்பிய கலைஞன். பா.ஜ.கவின் தேசவிரோதி என்பதற்கு பதில் தன்னையே அர்பன் நக்சலைட் என அறிவித்துக் கொண்டவர் கிரீஷ் கர்னாட்.

அவரது மறைவிற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய முழுவதும் உள்ள நடிகர்கள் எழுத்தாளர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்.