India
‘அமேதி’ தோல்வியை ஆராய குழு : ராகுல் காந்தி திட்டம்!
கேரளாவின் வயநாடு தொகுதியில் மிகஅதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காங். தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். அமேதி தொகுதியில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய ஒரு குழுவை அனுப்புகிறார் ராகுல் காந்தி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். வயநாட்டில் அதிக வித்தியாசத்தில் வென்ற ராகுல் அமேதியில் தோல்வியைத் தழுவியது காங்கிரஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார். ஆனால், அவரது முடிவை மாற்றுக்கொள்ளும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மிகுந்த செல்வாக்குப் பெற்ற அமேதியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஜூபைர் கான் மற்றும் ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா ஆகியோரை நியமித்துள்ளார் காங். தலைவர் ராகுல்
ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு அமேதி தொகுதியில் களஆய்வு செய்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிக்கை அளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!