India
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை கலைக்க, பாஜக முயற்சி - ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதால், நரேந்திர மோடியே மீண்டும் நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், புதிய அமைச்சரவை சகாக்களும் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு முன்பே தனது சித்து வேலைகளை காண்பிக்க தொடங்கிவிட்டது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
அதாவது, லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில், பதவியேற்பதற்கே முன்பே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கலகத்தை ஏற்படுத்தி, ஆட்சியை கலைக்க பாஜகவினர் முயற்சித்து வருவதாக அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !