India
மோடியின் புதிய அமைச்சரவையில் ஜெட்லி, சுஷ்மா இல்லை : காரணம் என்ன ?
நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்தாலும், அவரது அமைச்சரவையில் 2 முக்கியமான அமைச்சர்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பலவீனமான சூழலை எதிர்க்கட்சிகள் எப்படிக் கையாளப்போகிறார்கள் என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் முதல் 5 ஆண்டுகளில் அவருக்கு உறுதுணையாக இருந்த 2 முக்கிய அமைச்சர்கள் இந்த முறை பதவி வேண்டாம் என்று மறுத்துள்ளார். அவர்களில் ஒருவர் அருண் ஜெட்லி, மற்றொருவர் சுஷ்மா ஸ்வராஜ் இவர்கள் தொடர்ந்து 2 முக்கிய இடங்களில் அங்கம் வகித்த அமைச்சர்கள். இவர்கள் மோடிக்கு ஆலோசனை வழங்கும் நபராகச் செயல்பட்டவர்கள்.
குஜராத் முதலமைச்சர் மோடி செயல்பட்டதில் இருந்து, அருண் ஜெட்லி இருவரும் நல்ல நட்புடன் பணியாற்றிவந்துள்ளனர். இவர் மத்திய பா.ஜ.க தலைவர்களின் முக்கிய குழுவில் பணியாற்றியவர்.
மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சர் தான் 2வது இடமாகக் கருதப்பட்டது, ஆனால் இவர் பதவி வகித்த நிதி அமைச்சராக இருந்த அமைச்சரவை தான் இரண்டாவது மிக சக்தி வாய்ந்த நபராக இவரை வெளிக்காட்டியது.
பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, ஆதார் இணைப்பு, போன்ற திட்டத்தைக் கொண்டுவர உறுதுணையாக இருந்தவர். மேலும் கடந்த காலங்களில் மோடி அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், ஜி.எஸ்.டி பிரச்சனை, பணமதிப்பிழப்பு, சொத்துரிமை சட்டம், அமைச்சரவை நடவடிக்கை என அனைத்து நடவடிக்கைகளையும் இவர் தலைமையில்தான் மோடி அரசு முன்னெடுத்தது.
மேலும் ஜெட்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழங்கவேண்டிய சில முக்கிய ஆதாரங்களை அரசுக்கு அளித்துள்ளார். பாதுகாப்பு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இல்லாதபோதும் எதிர்க்கட்சிகளிடம் பாதுகாப்பு விவகாரம் குறித்து மோடி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக அவர் வாதாடினர்.
அவருக்கு அடுத்ததாக மிகமுக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜ் . இவர் வெளியுறவுத்துறையில் பணியாற்றியவர். இவர் மோடியின் முதல் 5 ஆண்டுக்கால ஆட்சியில் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்ப்பதற்காக மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புடன் செயல்படுவதில் அதிக உழைப்பைச் செலுத்தியவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிரதமர் மோடி நடத்திய ஒவ்வொரு குறிப்பிடத்தக்க இருதரப்பு மபேச்சுக்களுக்காக ஸ்வராஜ் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். பல அரசியல் பார்வையாளர்கள் சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறைக்கு உகந்த பணியைச் செய்யமுடியாது என்று அவர்கள் கருதினார் ஆனால் அவர் பங்கைச் சரியாகச் செய்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி எந்தவொரு வெளிநாட்டிலும் எங்காவது சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பிரச்சனையைச் சரி செய்ய முன்னின்று முயற்சி செய்தார். அவசியமானவர்களுக்கான விசா வழங்கல் மற்றும் துயரத்தில் உள்ள இந்தியர்களுக்கு நிவாரணம் போன்ற சிறு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தனிப்பட்ட ஆர்வத்தை அவர் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உடல்நிலை மோசமாக இருப்பதைக் காரணம் காட்டி, எந்தவித பதவியும் வேண்டாம் என்று மறுத்துள்ளனர். இவர்களின் இழப்பை ஈடு செய்யும் வகையில் யாரை மோடி தேர்ந்தெடுக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!