India
அரசுப்பள்ளி ஆசிரியர் டூ சிக்கிம் மாநில முதல்வர் : பி.எஸ் கோலே அசத்தல் !
சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 32 இடங்களில் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. கடந்த 2013ம் ஆண்டில்தான் சிக்கிம் கிராந்திகாரி கட்சி ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், 17 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். அதன்பிறகு மாநிலத்தில் ஆட்சியமைக்கும் படி பிரேம் சிங் தமாங்குக்கு ஆளுநர் கங்கா பிரசாத் அழைப்பு விடுத்தார்.
கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. விழாவில் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் கங்காபிரசாத் செய்து வைக்கவுள்ளார். இவரை பி.எஸ் கோலே என்று அம்மாநில மக்கள் அழைக்கிறார்கள்.
பி.எஸ் கோலே 1990ஆம் ஆண்டு அரசுப்பள்ளி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகள் அரசு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அரசியல் மீது இருந்த ஈடுபாடு காரணமாக பணிபுரிந்து வந்த ஆசிரியர் பதிவில் இருந்து தன்னை விலகிக் கொண்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1994ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றியுள்ளார். மூன்று முறை அதாவது 15 ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்துள்ளார். மேலும் ஊழல் வழக்கு ஒன்றில் பிரேம் சிங் தமாங் தண்டனை பெற்று ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!