India

சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 78 பெண் எம்.பி.,க்கள் : நிறைவேறுமா 33% மகளிர் மசோதா ?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மே 23ல் வெளியானது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, அந்த கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது.

இதற்கிடையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடுமுழுவதும் 716 பெண்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து 54 பெண்கள் வேட்பாளராக களம் கண்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் போடியிட்ட 716 பெண்களில், 78 பெண்கள் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி

1952ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு, வெறும் 5 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது, 14 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், அதிக எம்.பிக்களை நடப்பு மக்களவை கொண்டிருப்பது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.

தி.மு.க எம்.பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன்

ஆனால் இன்றளவும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமசோதா நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் ஜோதிமணி ஆகிய 3 பெண்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைக்கிறது தமிழகம்.