India

மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளிவந்தது. இதில் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அக்கட்சியே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கிறது.

இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடத்தப்பட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16வது மக்களவையை கலைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டது.

பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களவையை கலைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ராம்நாத் கோவிந்திடம் அளித்தார். மேலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தையும் மோடி அளித்தார்.

இதனையடுத்து புதிய அமைச்சரவை உருவாகும் வரை தற்போதைய அமைச்சரவையே நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார் ராம்நாத் கோவிந்த்.

இந்த நிலையில், 17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்டதை அடுத்து, 16வது மக்களவையை கலைக்க உத்தரவிட்டுள்ளார்.