India
இந்தியா - ஈரான் பெட்ரோல் சிக்கல் : பெட்ரோல் விலை அதிகரிக்குமா ? அச்சத்தில் பொதுமக்கள்
ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட ஈரான் அமெரிக்கா ஒப்பந்தம், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு விருப்பம் இல்லாததால், திடீரென ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா ஈரான் நாட்டை நேரடியாக பிரச்னைக்கு இழுத்துவிட்டது.
இதனை தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடை வித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் நட்பு நாடுகள் அனைத்துமே ஈரானிடம் பொருளாதார குறித்தோ வேறு எந்த தொடர்ப்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என நிர்பந்தித்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைத்துக்கொள்ள ட்ரம்ப் ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அதன்படி நவம்பர் 2018ல் தொடங்கிய இந்த அவகாசம் மே 2ம் தேதியோடு முடிந்துவிட்டது. இதனை அமெரிக்கா நீட்டிக்கலாம் என இந்தியா மனக்கணக்கு போட்டுகொண்டு சமாளித்து வருகிறது.
இந்தியா ஈரானிடமிருந்து கச்ச எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், இரு நாடுகளும் அதிகராப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை அமெரிக்காவின் கெடுபிடியை ஏற்று ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும். இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய் தேவையை ஈரான் பூர்த்தி செய்யும் நிலையில், அதனை இழந்துவிட்டால் கண்டிப்பாக கச்சா எண்ணெய் பற்றாக்குறை வரும். இதனால், அதிகபட்சம் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய்க்கு மேல் உயர வாய்ப்பு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !