India
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022-ல் செயல்படுத்தப்படும் - இஸ்ரோ சிவன் பேட்டி!
புவியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக பி.எஸ்.எல்.வி சி-46 என்ற விண்கலம் மூலம் ரிசாட் 2பி ஆர்1 என்ற செயற்கைக்கோளை இன்று காலை 5.27 மணியளவில் விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சம் மற்றும் வருங்காலத்தில் விண்வெளித்துறையில் இஸ்ரோ மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்து பேட்டியளித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன்.
அவர் கூறியதாவது,
பூமியில் ஏற்படவிருக்கும் பருவமாற்றங்கள் குறித்து பி.எஸ்.எல்.வி. சி-46 விண்கலம் உடனே தெரிவித்துவிடும். இதுவரை, விண்ணில் இருந்து புகைப்படங்கள் எடுக்கும்போது மேகமூட்டங்கள் இடையூறாக இருக்கும். ஆனால் தற்போது செலுத்தப்பட்டுள்ள விண்கலம் மூலம், துல்லியமான புகைப்படங்களை எந்த நேரத்திலும் எடுக்கும் வசதியை கொண்டுள்ளது.
இதேபோல், மேலும் சில விண்கலங்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முயற்சித்து வருகிறது என்றார்.
மேலும், ஜூலை 9-16ம் தேதிக்குள் சந்திராயன் - 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அது செப்டம்பர் 6ம் தேதி தரையிறங்கும் என்றும் சிவன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இதுவரை இல்லை. ஆனால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது. அதை, 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் செயல்படுத்த முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் 75-வது ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதன் பின்னரே நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
அதிநவீன செயற்கைக்கோள்களை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. விரைவில் பல்வேறு விண்கலங்களை அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?