India
அம்பானியைத் தொடர்ந்து ‘The Wire’ மீதான வழக்குகளை வாபஸ் பெறும் அதானி!
ரஃபேல் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் அனில் அம்பானி ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டது.
ரஃபேல் ஒப்பந்தம் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே சந்தேகங்களைக் கிளப்பி வருகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சி மீதும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீதும் அனில் அம்பானி மானநஷ்ட ஈடாக ரூ.5,000 கோடி கேட்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். இந்நிலையில், கௌதம் அதானி, ‘தி வயர்’ நிறுவனம் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமத்தை விமர்சிக்கும் விதமாக 'The Wire' நிறுவனம் வெளியிட்ட பல்வேறு கட்டுரைகளுக்கு எதிராக மானநஷ்ட ஈடு கேட்டுத் தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற அதானி குழுமம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!