India

மோடி தியானம் செய்த குகையில் என்னென்ன வசதிகள் தெரியுமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தேர்தல் பிரசாரங்களை முடித்த பிரதமர் மோடி, உத்தராகண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு நேற்று சென்றுள்ளார்.

இதனையடுத்து, அங்குள்ள பனிமலை குகையில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட போவதாக செய்திகளும் வெளியானது. மேலும், தியானத்தின் போது செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதும், மோடி தியானம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது, மக்கள் மற்றும் நெட்டிசன்களுக்கிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மோடி தங்கியிருந்த பனிமலை குகையில் செய்யப்பட்ட வசதிகள் குறித்த புகைப்படமும் வெளிவந்துள்ளது. அந்த குகையில் குஷன் மெத்தை, தொலைப்பேசியுடன் கூடிய வைஃபை வசதி, கழிவறை வசதி, துணி தொங்கவிடும் ஸ்டாண்ட் என ஏகபோக வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், மெத்தை மீது அமர்ந்தபடி, பின்னால் தலையணையில் சாய்ந்துபடி காவி துணி போர்த்தி மோடி தியானம் செய்யும் புகைப்படம் வெளியாகியிருப்பது குறித்து பிரபல ஆங்கில நாளிதழான தி டெலிகிராஃப் பத்திரிகையும் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.