India
பா.ஜ.க அல்லாத ஆட்சி : முக்கிய தலைவர்களைச் சந்திக்கும் சந்திரபாபு நாயுடு!
காங்கிரஸ் கூட்டணியில் அல்லாத கட்சிகளும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைய வேண்டும் என முயன்று வருகின்றன. பா.ஜ.க ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்கு பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநிலக் கட்சிகள் அனைத்தையும் காங்கிரஸுடன் இணைய வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தல் நாளையோடு முடிவடையவிருக்கும் நிலையில் தற்போது அவர் மீண்டும் தனது திட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு நேற்று கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்துப் பேசினார். பின்னர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. அப்போது தேர்தல் முடிவுகள் வெளியானதும் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். இன்று மாலை உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திரபாபு நாயுடு விரைவில் சந்திக்க உள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று பா.ஜ.க அல்லாத கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!