India
“கோட்சே ஒரு தேசபக்தர்” எனக் கூறிய விவகாரம் : அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் கூறியது குறித்து மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிரக்யா சிங் தாக்கூர் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாட்டின் சிறுநீரைப் பயன்படுத்தியதால் தன தனக்கிருந்த புற்றுநோய் குணமானது எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரே பிரக்யாவுக்கு அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டதை வெளிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதால், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரியுள்ளது.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!