India
மேகமூட்டத்தில் ரேடாரால் விமானங்களைக் கண்டறிய முடியாதா? - வகையாகச் சிக்கிக்கொண்ட மோடி!
பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு பேட்டியில், “பாலகோட் விமானப்படை தாக்குதலை மேகமூட்டத்தின்போது நடத்தினால் பாகிஸ்தான் ரேடாரில் இருந்து தப்பித்துவிடலாம் என நான்தான் ஐடியா கொடுத்தேன்” எனச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நியூஸ் நேஷன் எனும் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, “அன்று வானிலை திடீரென மாறி மேகமூட்டத்துடன் இருந்தது. மேகமூட்டமாக இருப்பதால், திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதால் வல்லுநர்கள் தாக்குதல் தேதியை மாற்றலாம் என்று கூறினர்.
ஆனால், மேகமூட்டமாக இருப்பதாலும், மழை பெய்வதாலும் இப்போது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் நாட்டின் ரேடாரிலிருந்து நாம் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நான்தான் சொன்னேன். அதன்படியே பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடைபெற்றது” எனப் பேசியுள்ளார்.
ஆனால், ரேடாரில் மிகக்குறைந்த அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் மேகமூட்டத்திற்கிடையே செல்லும் விமானங்களைக் கண்டறிவதில் எந்தத் தடையும் இருக்காது என்பதுதான் உண்மை.
தான் தற்பெருமை பேசிக் கொள்வதற்காக உண்மைக்குப் புறம்பான தகவலைச் சொல்லி விமானப்படை அதிகாரிகளை மட்டம் தட்டும் விதமாகப் பேசியுள்ள பிரதமர் மோடியை எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!