India
50% விவிபேட் வாக்கு எண்ணிக்கை மீதான 21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனு தள்ளுபடி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மே 12 மற்றும் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது இ.வி.எம் இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை 50% வி.வி.பேட் (VVPAT) ஒப்புகை வாக்குகளுடன் சரிபார்த்து எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க, தெலுங்கு தேசம், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 5 இ.வி.எம். இயந்திரத்தில் உள்ள வாக்குகளை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து 21 எதிர்க்கட்சிகளும் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தன. சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்த போது அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 50% விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை வாக்குகளை எண்ணினால், கால தாமதமாகும் என்பதால், தொகுதிக்கு 5 இ.வி.எம் இயந்திரத்தில் உள்ள வாக்குகளை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க மட்டுமே உத்தர்விட முடியும் எனக் கூறி எதிர்க்கட்சிகளின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!