India

பீகார் ஹோட்டலில் 2 மின்னணு வாக்கு எந்திரங்கள் பறிமுதல்!

நேற்று நடைபெற்ற 5ஆம் கட்ட மக்களவை தேர்தலில், பீகாரில் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முசாஃபர்பூரில் ஒரு ஹோட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 2 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சார் ஆட்சியரால் கைப்பற்றப்பட்டன.

முசாஃபர்பூர் சார் ஆட்சியர் அவற்றை கைப்பற்றியபோது அங்கு கூடியிருந்த மக்கள் மின்னணு வாக்கு எந்திரம் வாகனத்தில் இருந்ததைகை கண்டு அதிர்ந்து போனார்கள். பின்னர் இதில் முறைகேடுகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்தது முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன் கோஷ் செய்தியாளர் சந்திப்பின் போது: "தேர்தல் அதிகாரி அவதேஷ் குமார் என்பவர் மின்னணு வாக்கு எந்திரங்களை ஹோட்டலுக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. பழுதான மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக மாற்று எந்திரங்கள் மற்றும் கருவிகளையே அவர் ஹோட்டலில் வைத்திருந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார்" என கூறினார்.

மேலும், காரணங்கள் எதுவாக இருப்பினும் இது விதிமீறல் செயலே! எனவே விளக்கம் கேட்டு அதிகாரிக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் நோட்டிஸ் அனுப்படுவதாகவும், விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.