Fani cyclone
India

மேற்கு வங்கம் நோக்கி நகரும் ஃபானி புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

ஒடிசாவில் கரையைக் கடந்துவரும் ஃபானி புயல், தற்போது மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருவதாக ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் காலை 8 மணி முதல் கரையைக் கடக்கத் துவங்கிய ஃபானி புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்கிறது. ஃபானி புயலுக்கு புவனேஸ்வரில் 3 பேர் பலியாகியுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேற்குவங்கம் நோக்கி நகரும் புயலால் காற்றின் வேகம் அதிகரிக்கும். அடுத்த 6 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை தொடரும் எனவும், மேற்குவங்க கடற்பகுதி நோக்கி புயல் நகரும்போது ஒடிசாவில் புயலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவித்துள்ளது ஒடிசா வானிலை ஆய்வு மையம்.

ஃபானி புயல் மேற்குவங்கம் நோக்கி நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உயரதிகாரிகளுடன் மம்தா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது.